தனியார் கல்லூரி பேருந்து மின்கம்பம் மீது மோதி விபத்து -15 -க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்
நாமக்கல், 04 மார்ச் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு செல்வதற்காக மாணவ மாணவிகள் செந்தாரப்பட்டியில் இருந்து தம்மம்பட்டி கீரிப்பட்டி கோம்பை மெட்டாலா வழியாக பேருந்து
விபத்து


நாமக்கல், 04 மார்ச் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

கல்லூரிக்கு செல்வதற்காக மாணவ மாணவிகள்

செந்தாரப்பட்டியில் இருந்து தம்மம்பட்டி கீரிப்பட்டி கோம்பை மெட்டாலா வழியாக பேருந்து வரும்போது உரம்பு பகுதியில் இருந்து கிராம சாலை வழியாக மெட்டாலா வந்த நிலையில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 44 பேர் பயணம் மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 15 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் லேசான காயங்களுடன் ராசிபுரம் அரசு தலைமை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam