Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
சென்னை சவுகார்பேட்டை சிங்கண்ணன் தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தில் 4 -வது மாடியில் அனமந்துள்ள நகைபட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது.
கடந்த 25-ஆம் தேதி நகைகளை உருக்கும் பணியில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ எனக்குத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் உள்பட 7 பேர் ஆகியோர் தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்தவர்களை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீக்காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்த விபத்தில் உரிமையாளர் சுமன் பால் கடந்த 26 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல சிகிச்சை பலனின்றி சிமந்தோமல் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மற்றொரு ஊழியரான சூரஜ் தோலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 4 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து யானைகவுனி போலீசார் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ