Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 மார்ச் (ஹி.ச)
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தொண்டர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார். அவருடைய ஆதரவாளர்கள் அவர் மீது வண்ணங்கள் பூசி மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் மத்தியில் ராகுல் காந்தி அனைவரின் மீதும் வண்ணங்களைப் பூசியதோடு, பூக்களைத் தூவி ஹோலி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இதுதொடர்பாக ராகுல் பகிர்ந்த எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
வண்ணங்கள் மற்றும் அன்பின் பண்டிகையான ஹோலியில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹோலியின் வண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை புதிய நம்பிக்கைகள், புதிய உற்சாகம் மற்றும் எண்ணற்ற மகிழ்ச்சியால் நிரப்பட்டும்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b