Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 04 மார்ச் (ஹி.ச.)
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2026-27-ம் வருடத்திற்கு இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 01/04/2026. வயது வரம்பு 17.5 முதல் 22 வரை. இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுதலாம்.
கல்வித்தகுதி, உடல் தகுதி, தேர்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அக்னிவீர் திட்டத்தில் இராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சேர்வதற்கு இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உடல் தகுதி பயிற்சிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
குறுகிய கால முன் தயாரிப்புடன் வெற்றி பெறுவதற்கு மிக அதிகமான வாய்ப்புள்ள இத்தேர்வினை எழுதி, இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இத்தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தேர்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b