10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (மார்ச் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது.

8 லட்சத்து 82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என 9 லட்சத்து 9,002 பேர் எழுதவுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (மார்ச் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறை வலைத்தளம் http://dgeapp.tnschools.gov.in/ல் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

அதே நேரம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்க ஏதுவாக, அவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே கடந்த பிப்ரவரி 25ம் தேதியே ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b