Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 04 மார்ச் (ஹி.ச)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி தொடர்புடைய அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொருட்டு மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனம் நிறுவப்பட உள்ளது.
இதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்:
பதவியின் பெயர்மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை 01
பணி நியமன முறைஓய்வு பெற்ற வங்கி அலுவலர் (ஒப்பந்த அடிப்படையில்)
மாதாந்திர ஊதியம் ரூ. 50,000/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09.03.2026 மாலை 5.45 மணி வரை.
குறிப்பு: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தொடர்பு முகவரி:
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கன்னியாகுமரி மாவட்டம்.
மின்னஞ்சல்: dpiu_kki@yahoo.com தொலைபேசி: 04652-278449
இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் . ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b