மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மிக்சர் கடை உரிமையாளர் கொலை
திருவள்ளூர், 04 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியில் விருத்தாசலத்தைச் சேர்ந்த சின்னப்பன்(50) மொத்தமாக விற்பனை செய்யும் மிக்சர் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபியா(43)என்கிற மனைவியும் கெல்வின்(19) என்கிற மாற
கொலை


திருவள்ளூர், 04 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியில் விருத்தாசலத்தைச்

சேர்ந்த சின்னப்பன்(50) மொத்தமாக விற்பனை செய்யும் மிக்சர் கடை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சோபியா(43)என்கிற மனைவியும் கெல்வின்(19) என்கிற

மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர்.

இவரது மனைவி சோபியா கலந்த சில ஆண்டுகளுக்கு

முன்பு கருத்துவேறு காரணமாக பிரிந்து சொந்த ஊரான விருதாச்சலத்தில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சின்னப்பன் அவரது மகனுடன் மொத்தமாக விற்பனை செய்யும்

மிக்சர் கடையுடன் கூடிய கட்டிடத்தில் வசித்து வருகின்றனர்.

இவரது கடையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சானன் ரூட்(44) என்பவர் வேலை பார்த்து

வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சின்னப்பன் மற்றும் பஞ்சானன் ரூட் ஆகிய

இருவரும் மது அருந்தி உள்ளனர்.

அப்போது சம்பளம் தொடர்பாக இருவருக்கும்

வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே

வடமாநிலத்தைச் சேர்ந்த பஞ்சானன் ரூட் என்பவர் சின்னப்பனை உருட்டு கட்டையால் தலையில் பலமாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வெங்கல்

போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒடிசா

மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சானன் ரூட் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam