தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கா
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 9-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (5-ஆம் தேதி) வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகங்களுடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM