இந்தி மட்டுமே இந்தியா என்ற மொழி கொள்கையோடு இந்தி திணிப்பை வெறி கொண்டு நடத்துகிறது மோடி அரசு - எம்பி சு.வெங்கடேசன்
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலக நுழைவாயிலில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அறிக்கை விட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியின் தமிழ் பற்றை
Suve


Be


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

தெற்கு இரயில்வேயின்

திருச்சி கோட்ட அலுவலக நுழைவாயிலில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அறிக்கை விட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியின் தமிழ் பற்றை நன்றியோடு நினைவு கூறியுள்ளார் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கர்த்தவ்ய துவார் என பெயரிட்டது ஏன் என்று தமிழகமே கேட்டுக் கொண்டிருக்கிறது. திரு எடப்பாடி அவர்களோ தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவருகிறது என்று நற்சான்றிதழ் தருகிறார்.

எடப்பாடி அவர்களே திருச்சியில் ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது ஒன்றிய அரசு தலையிட்டு திருத்த வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இந்த தவறை செய்வதே ஒன்றிய பாஜக அரசு தான். இதற்கு அடிப்படை காரணமே மோடி அரசின் மொழி கொள்கைதான்.

பிரதமர் மோடி பொறுப்பேற்ற 2014 ஆண்டுக்கு பின் பத்து புதிய இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பத்துக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர்கள் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. பெயர்களின் விபரம்;

வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத், தேஜஸ், ஹம்சபர், அந்த்யோதயா, கதிமான், மகாமனா, உதய், பாரத் கௌரவ் ஆகும்.

இரயில்வே திட்டங்களுக்கு அம்ரித் பாரத், மிஷன் ரப்தார், கதி சக்தி, இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா, மிஷன் சத்யநிஷ்டா என்று பெயர்களும்,புதிய தொழில் நுட்பத்துக்கு கவச், புகார் பதிவு செய்யும் செயலிக்கு இரயில் மதத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தி மட்டுமே இந்தியா என்ற மொழி கொள்கையோடு இந்தி திணிப்பை வெறிகொண்டு நடத்துகிறது மோடி அரசு.

அதற்கு எதிராக தமிழக மக்கள் போராடும் போது மோடியின் தமிழ் பற்றை பாராட்டி அறிக்கை வெளியிடுவது போன்ற அவமானம் வேறொன்றும் இல்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ