நெல்லை மாநகரத்தில் 15 நாட்களுக்கு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை
நெல்லை, 04 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாநகரப் பகுதிகளில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் 15 நாட்களுக்கு கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் வெளியிட்டுள்ள
Nellai DIG Saravanan


நெல்லை, 04 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாநகரப் பகுதிகளில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் 15 நாட்களுக்கு கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

'நெல்லை மாநகரப் பகுதிகளில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து பராமரிக்கும் நோக்கில் சென்னை மாநகர போலீஸ் சட்டம் பிரிவு 41(2)ஐ போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.

இதன்படி இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த குறிப்பிட்ட நாட்களில் நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN