Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் உள்ள அரசு புறம்போக்கு கல் குவாரியை அமைச்சர் அழுத்தத்தால் முறையான அறிவிப்பின்றி ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பொள்ளாச்சி நகரில் கூடுதல் மனமகிழ் மன்றத்தை திறக்க கூடாது என வலியுறுத்தி அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறும் போது :
பொள்ளாச்சி மண்ணூர் கிராமத்தில்
விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சரின் வற்புறுத்தலின் பேரில் கல்குவாரிக்கு அனுமதி அளிக்கபட இருக்கிறது.
கல்குவாரிக்கான ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும் என கல்குவாரியை சுற்றியுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதையும் தாண்டி அமைச்சர் தலையீட்டால் அனுமதி வழங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.
கன்னியம்மன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கேரள எல்லைக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்திற்கு அனுமதி வழங்கும் பணி முழு மூச்சாக பணி நடைபெற்று வருகின்றது.
ஆட்சியர் இல்லாததால்
டி.ஆர்.ஓவிடம் மனு கொடுத்து இருக்கின்றோம்.
பொள்ளாச்சி ஆண்கள்
பள்ளி அருகே டாஸ்மாக் ஏற்கனவே இருக்கும் நிலையில் புதியதாக ஒரு FL2 கொண்டு வர இருக்கின்றனர்.
இதற்கு அனுமதி தர கூடாது என்றும் மனு அளித்து இருக்கின்றோம்.
சாலை போக்குவரத்துடன். தொடர்பு இருக்க கூடிய அமைச்சர் இந்த பணிகளை செய்கின்றார்.
100 ஏக்கர நிலம் வாங்கி 20 ஏக்கர் அனுமதி வாங்கி கல்குவாரி அமைக்க இருக்கின்றனர்.
சுற்றுவட்டார விவசாயிகள் வேண்டாம் என புகார் கடிதம் கொடுத்து இருக்கின்றார்.
குவாரிக்கு
அனுமதி கொடுத்தால் மக்களை திரட்டி போராடுவோம்.
கொங்கு மண்டலத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழகத் முழுவதும் 210 தொகுதிகளில் வெற்று பெற்று தனிபெறும் கட்சியாக ஆட்சி அமைப்போம்.
விஜய் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என யூகத்தின் அடிப்படையில் தான் கூறுகிறார்கள், ஆனால் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J