Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 04 மார்ச் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைக் காவல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 19 ஆம் தேதி விசைப்படகில் கடலுக்கு சென்ற இம்மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் குற்றம் சாட்டப்பட்டனர். இதையடுத்து ஒரு விசைப்படகுடன் 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்ற நீதிபதி, மீனவர்களின் சிறைக் காவலை வருகின்ற 18 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து 12 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN