சங்கராபுரம் அருகே அமிர்தநாயகி கோயிலில் வெண்கல சண்டிகேஸ்வரர் சிலை திருட்டு
கள்ளக்குறிச்சி, 04 மார்ச் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தில் அருள்மிகு அமிர்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வழக்கம்போல் பூஜை செய்ய வந்த பூசாரி, அங்கிருந்த இரண்டு அடி கொண்ட ச
Sankarapuram Police Station


கள்ளக்குறிச்சி, 04 மார்ச் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் கிராமத்தில் அருள்மிகு அமிர்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் வழக்கம்போல் பூஜை செய்ய வந்த பூசாரி, அங்கிருந்த இரண்டு அடி கொண்ட சண்டிகேஸ்வரர் வெண்கல சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோவிலின் சுற்றுச்சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலையை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில். கோவில் சிலை திருடப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN