டி20 உலகக் கோப்பை - முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதல்
கொல்கத்தா, 04 மார்ச் (ஹி.ச.) 2026 டி20 உலகக் கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த பிறகு, அரையிறுதி ஆட்டங்கள் நடக்க இருக்கின்றன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போ
டி20 உலகக் கோப்பை - முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதல்


கொல்கத்தா, 04 மார்ச் (ஹி.ச.)

2026 டி20 உலகக் கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.

சூப்பர் 8 போட்டி முடிவடைந்த பிறகு, அரையிறுதி ஆட்டங்கள் நடக்க இருக்கின்றன.

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதில், கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று முதலாவது அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM