Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தஞ்சையில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு காரில் சென்ற தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின.
விஜயை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கார் மோதி படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். 5 பேரில் விக்னேஷ் என்ற இளைஞர் கவலைக்கிடமாக உள்ளார். தஞ்சை காமாட்சி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய இளைஞர் அருணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் தவெக கட்சி ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டதாக பரவும் தகவலுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தவெக கட்சி ஊர்வலத்தில் விபத்து: போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் மோதியதாகப் பரப்பப்படும் வதந்தி !
பரவும் செய்தி
தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன
இது முற்றிலும் வதந்தி.
தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பார்க்காமல் அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
வதந்தியைப் பரப்பாதீர் !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b