டிடிவி தினகரன் ஹோலி பண்டிகை வாழ்த்து
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) இந்தியா முழுவதும் இன்று (மாா்ச் 4) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில்
TTV Dhinakaran wishes you a happy Holi


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

இந்தியா முழுவதும் இன்று (மாா்ச் 4) ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமையோடு, சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் நாளாக அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b