திருச்சி ரயில்வே அலுவலக ஹிந்தி பெயர் பலகையை உடனடியாக தமிழில் மாற்ற தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கர்தவ்ய த்வார் என்பதற்குத் தமிழில் கடமையின் நுழைவுவாயில் என்று பொர
Tamilisai Soundararajan requests the Union Railway


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது கர்தவ்ய த்வார் என்பதற்குத் தமிழில் கடமையின் நுழைவுவாயில் என்று பொருள்படும். இத்தகைய சூழலில் தான் புதிய நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தமிழ் மொழி பலகையை முறையாக வைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தயவுசெய்து

தெற்கு ரெயில்வேக்கு தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள், ஏனெனில் சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b