Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 04 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பட்டாபி ராமர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்தல்குடியை சேர்ந்த சங்கரநாராயணன் (50) என்பவர் அருப்புக்கோட்டையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
தனது வணிகத்திற்கு தேவையான பேக்கிங் லைசன்ஸ் பெறுவதற்காக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி (48) அவர்களை அணுகியுள்ளார்.
லைசன்ஸ் வழங்க ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கரநாராயணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் திட்டமிட்டு சோதனை நடத்தியனர். லஞ்சமாக ரூ.15,000 பெறும் போது அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாந்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN