Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 04 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம்
காட்டாங்குளத்தூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
தேனியிலிருந்து 45
பயணிகளுடன் சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்தை 55
வயதான ஓட்டுநர் கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
பேருந்து காட்டாங்குளத்தூர் பகுதியை கடந்து சென்றபோது முன்னால் சென்ற நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றச் செல்லும் தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக
திடீரென இடதுபுறம் திரும்பியுள்ளது இதனால் நிலைதடுமாறிய ஆம்னி பேருந்து அந்த வாகனத்தின் பின்பக்கவாட்டில் பலமாக மோதியது இதில் கட்டுப்பாட்டை இழந்த
பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அங்கிருந்த மின்சார கம்பத்தின் மீது மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த 45 பயணிகளும் பெரும் அசம்பாவிதம் இன்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் கண்ணன் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு
முகத்திலும் உடலிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன
தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து
தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல்
நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam