Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச)
அதிமுக ஐடி விங் நிர்வாகி , மனைவி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியைச் சேர்ந்த முகம்மது பிலால் (எ) வடிவேல் அவர்கள், சமூக வலைதளத்தில் வைத்த ஒரு அரசியல் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள மனமில்லாமல், விசிக நிர்வாகிகள் 15 பேர் அவரது வீட்டிற்கு சென்று அவர் மீதும், அவர் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகம்மது பிலால் மற்றும் அவரது மனைவியை, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தால் உங்களை விமர்சனம் செய்யக் கூடாதா திருமாவளவன் ? நீங்கள் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதரா? நீங்களும் திமுக கூட்டணியில் இருக்கும் மற்றுமொரு அல்லக்கை தானே?
நாங்குநேரி அருகே பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பெரும்பத்து கிராமத்தில் நடந்த தாக்குதலுக்கு ஒரு வார்த்தை #சமூக_அநீதி_திமுகஅரசு எதிர்த்து பேச உங்களுக்கு தெம்பு, திராணி இருந்ததா?
இரு விபத்துக்கு Sorry கேட்டு நகரும் பெருந்தன்மை இல்லாமல், ஒரு அப்பாவி வழக்கறிஞரை, உங்கள் கட்சி குண்டர்களை ஏவி பார் கவுன்சில் வளாகம் உள்ளே வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அதையும் சரியாக அடிக்கவில்லை என்று பேசியவர் தானே நீங்கள்?
உங்கள் வழியைப் பின்பற்றி தான் உங்கள் தொண்டர்கள் இப்படி தாக்குதலில் ஈடுபடுகின்றார்களா?
ஒரு பெண்ணென்று பாராமல், முகம்மது பிலால் மனைவி மீதும் தாக்குதல் நடத்திய இவர்கள் எல்லாம் அரசியலில் இருக்க துளியும் அருகதை அற்றவர்கள்!
திமுக ஆட்சி இருக்கிறது என்ற திமிரில் ஆட்டம் போடும் இந்த குண்டர்களின் காலம் இன்னும் இரண்டே மாதங்கள் தான். அதன் பிறகு வரப்போகும் அதிமுக ஆட்சியில், இந்த ரவுடியிஸக் கொட்டமெல்லாம் சட்டப்படி அடக்கப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN