அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரம்
சென்னை, 05 மார்ச் (ஹி.ச.) நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். க
Eps


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)

நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அனைத்து மாவட்ட செயலாளர்களையும் பசுமைவழிசாலை வீட்டுக்கு அழைத்து தனி தனியாக ஆலோசனை நடத்தினார்.

ஒரு மாவட்ட செயலாளருக்கு தலா 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 4 பேர் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளனர்.

அதில் இருந்து யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என ஆய்வு செய்து வேட்பாளரை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ