Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
சென்னை மாவட்டம், வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்
ரவி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரும் இவரது சகோதரர் பாலமுருகன் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவரின் மகன் கிறிஸ்டோபர் என்கின்ற ஸ்டீபன் என்பவர் கஞ்சா போதையில் ரவி வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த குப்பைகள் கொட்டும் குப்பைத்தொட்டியை போதையில் காலால் எட்டி
உதைத்ததாக தெரிகிறது.
இதை அடுத்து ரவியின் மகன் ஜீவா இது குறித்து சம்பந்தப்பட்ட கிறிஸ்டோபரிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
ரவியின் மகன் ஜீவா கிறிஸ்டோபரை என்கின்ற ஸ்டீபனை கடுமையாக தாக்கி அனுப்பியதில் கோபத்தோடு சென்ற கிறிஸ்டோபர் அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி அளவில் தனது
நண்பர்கள் இருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ரவியின் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசி விட்டுச் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரவியின் குடும்பத்தினர்
பயங்கர சத்தம் கேட்டவுடன் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து
பார்த்தபோது வீட்டின் வெளியே பெட்ரோல் பாம் வீசப்பட்டு வீட்டில் கண்ணாடி
மற்றும் வீட்டில் இருந்த ஒரு சில பொருட்கள் அதிலிருந்து நாசம் அடைந்ததாக தெரிய
வருகிறது.
இதனை தொடர்ந்து இது குறித்து உடனடியாக ரவியின் குடும்பத்தினர் காவல்துறை
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த சென்னை மகாகவி பாரதி நகர் ரோந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு
செய்தனர்.
தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் என்கின்ற
ஸ்டீபன் அவருடன் தனுஷ் மற்றும் மோனிஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வந்த நிலையில் செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த இந்த மூன்று பேரை காவல்துறையினர்
கைது செய்தனர்.
கிறிஸ்டோபர் என்கின்ற ஸ்டீபன் அந்த பகுதியில் அடிக்கடி கஞ்சா அடித்து விட்டு
இதேபோன்று அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் தொடர் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam