Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச)
அஸ்ஸாமில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து பையுடன் வெளியே வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மேகலாவை சேர்ந்த பர்கிஸ் கே சங்மா(33),
டென்சக் ஜி மோமின்(25) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இருவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு ரயில் மூலம் பெரம்பூர் வந்ததும் பின்னர் அந்த கஞ்சாவை சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் இவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ