Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 மார்ச் (ஹி.ச.)
மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன
மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி விமானங்களும் அமெரிக்கா - ஈரான் போர்க்க காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டது.
அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமான நிலவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள விமான நிறுவனங்களிடம் பயணிகள் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து அதன் பின் பயணம் மேற்கொள்ள மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் .
Hindusthan Samachar / Durai.J