நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம்
சென்னை, 05 மார்ச் (ஹி.ச.) மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது, இதுகுறித்து,மநீம கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பத
Makkal Needhi Maiam Party executive committee meeting tomorrow


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது,

இதுகுறித்து,மநீம கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் தலைவர், கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் 06-03-2026 (வெள்ளிக்கிழமை), மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b