Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 05 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்
அய்யாவு என்பவர் மகன் ராஜா செல்வம்(30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் பட்டுக்கோட்டையில் லோடுமனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராஜா செல்வம் பழனி கோவிலுக்கு செல்வதற்காக தனது சொந்த ஊரான சாமி நத்தம் கிராமத்திற்கு வந்துள்ளார். பழனி கோவிலுக்கு சென்று விட்டு சாமி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார். ராஜா செல்வம் எப்போதும்
வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தான் வழக்கம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ராஜா செல்வம் மொட்டை மாடியில் தூங்கிய
போது மர்ம நபர்கள் ராஜா செல்வத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டப்பட்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மொட்டை மாடியில் காலையில் தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்து சடலமாக கடந்த ராஜா செல்வத்தை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து திருச்சுழி
காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் ராஜா செல்வம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஜா செல்வத்தை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
Hindusthan Samachar / GOKILA arumugam