ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 05 மார்ச் (ஹி.ச.) ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், இன்று அவரது பிறந்தநாளில், ஸ்ரீ பிஜு பட்நாயக்குக்கு அஞ
ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி


புதுடெல்லி, 05 மார்ச் (ஹி.ச.)

ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில்,

இன்று அவரது பிறந்தநாளில், ஸ்ரீ பிஜு பட்நாயக்குக்கு அஞ்சலி செலுத்துகிறேன். மேலும் ஒடிஷாவின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை நினைவு கூர்கிறேன்.

என்று பதிவிட்டுள்ளார்.

பிஜு ஜனதா தளம் டிசம்பர் 26, 1997 அன்று நிறுவப்பட்டது.

முதலில் 1961-1963 வரையிலும் பின்னர் 1990-1995 வரையிலும் பிஜு பட்நாயக் இரண்டு முறை மாநில முதலமைச்சராக இருந்தார்.

அவர் ஏப்ரல் 17, 1997 அன்று காலமானார்.

Hindusthan Samachar / JANAKI RAM