34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னையில் இடமாற்றம் - போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை, 05 மார்ச் (ஹி.ச.) சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் அருண் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்ட ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ரோக
34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னையில் இடமாற்றம் - போலீஸ் கமிஷனர் உத்தரவு


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் 34 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் அருண் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரோகிணி சாஸ்திரிநகருக்கும், ராஜேஷ் கண்ணா வண்ணாரப்பேட்டைக்கும், வேல்மணி ஆயிரம்விளக்குக்கும், ஆனந்த் துறைமுகத்துக்கும், சீனிவாசன் பெரியமேட்டுக்கும் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரவிச்சந்திரன் வேப்பேரிக்கும், கண்ணன் ராயப்பேட்டைக்கும், ராமசாமி சேத்துப்பட்டுக்கும், கிருஷ்ணகுமார் குமரன்நகருக்கும், ராஜ்பிரபு தேனாம்பேட்டைக்கும், செந்தில் முருகன் வடக்கு கடற்கரைக்கும் சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

மாற்றப்பட்ட மற்ற இன்ஸ்பெக்டர்கள் பிற பிரிவுகளில் பொறுப்பேற்பார்கள்.

Hindusthan Samachar / JANAKI RAM