Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தேமுதிகவுக்கு 2009 இல் இருந்தே மாநிலங்களவை உறுப்பினர் பதவி தவறி வருவதாகவும்,
கால தாமதமாக கிடைத்தாலும் சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் மகிழ்ச்சி எனவும், இந்த புகழ் அனைத்தும் கேப்டனை தான் சேரும் என தெரிவித்தார்.
2024 இல் அதிமுக ஏன் மாநிலங்களவை உறுப்பினர் இடம் கொடுக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக விரைவில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அதன் பின் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்போம். எங்கள் உரிமைக்கு உட்பட்டு தொகுதிகளை கேட்டு பெறுவோம் என தெரிவித்தார்.
திமுக உடன் கூட்டணி அமைத்த அன்றே தேமுதிக நிர்வாகிகள் கொண்டாடினார்கள். அவர்கள் விருப்பத்திற்கேற்ப தான் கூட்டணி அமைத்துள்ளோம்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி அனைத்தும் சேர்த்து 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர்,
திமுகவிடம் துணை முதலமைச்சர் வேண்டும் என எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என தெரிவித்தார்.
திமுக உடன் கூட்டணி அமைத்தது கேப்டன் ஆன்மா மன்னிக்காது என பாஜக தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு,
கேப்டனின் ஆன்மா என்பது கடைக்கோடி தொண்டன் தான். தேமுதிகவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் யார் யாரோ கேப்டனின் ஆன்மா குறித்து பேசுகிறார்கள் என விமர்சித்தார்..
கட்சியில் பலர் இருக்கும் போது சுதீஷுக்கு ஏன் எம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு,
தேமுதிகவில் இத்தனை பேர் பதவியில் இருக்கும் போது சுதீஷ் மீது மட்டும் பார்வை இருப்பது ஏன்..பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்து உள்ளது. தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தான் விஜய் பிரபாகரன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
சுதீஷ் கட்சி தொடங்கிய நாளில் இருந்து கட்சிக்காக உழைத்து வருகிறார்.
கேப்டனுக்கும் கட்சிக்கும் எனக்கும் கட்சி தொடங்கிய நாளில் இருந்து உறுதுணையாக இருந்து வருகிறார்.
அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இல்லையா? அவருக்கு அருகதை இல்லையா ? உரிமை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / P YUVARAJ