Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 மார்ச் (ஹி.ச.)
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் அதில் இருந்த 87 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தக் கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது.
பயிற்சி முடிந்து ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
உலகம் தற்போது அதிர்வுகளால் நிரம்பிய ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவின் எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. நமது இறக்குமதிகளில் 40%-க்கும் மேற்பட்டவை ஹோர்முஸ் நீரிணை வழியாக நடப்பவை. அந்த பாதை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.
இந்த மோதல் நம் வீட்டின் (நாட்டின்) வாசலுக்கே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஓர் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் இதுவரை எதையும் கூறவில்லை.
இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை. ஆனால் அதற்கு பதிலாக, இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்து சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b