சேலம் ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் நீர் திறப்பு
சேலம், 05 மார்ச் (ஹி.ச.) சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற
Salem Anaimaduvu Reservoir


சேலம், 05 மார்ச் (ஹி.ச.)

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், புதிய பாசனப் பகுதிகளுக்கு இன்று (05.03.2026) நீர் திறக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி முதல் அணையின் பிரதான கால்வாய் மதகு வழியாக வலது புற கால்வாயின் மூலம் 30 கனஅடி/வினாடி மற்றும் இடது புற கால்வாயின் மூலம் 15 கனஅடி/வினாடி ஆக மொத்தம் 45 கனஅடி/வினாடி என நாளொன்றுக்கு 3.888 மில்லியன் கன அடி வீதம் 8 நாட்களுக்கு 31.396 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் பழைய பாசனப் பகுதிகளுக்கு 13.03.2026 அன்று காலை 8 மணி முதல் அணையின் பிரதான கால்வாய் மதகு வழியாக 60 கனஅடி/வினாடிஎன நீர் திறந்து ஆற்று வெளி போக்கி (River Outlet) வழியாக நாளொன்றுக்கு 5.184 மில்லியன் கன அடி வீதம் 9 நாட்களுக்கு 47.094 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பாக (special wetting), தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், புழுதிக்குட்டை, குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரபிள்ளை வலசு, கோலத்துகோம்பை மற்றும் நீர்முள்ளிக்குட்டை ஆகிய கிராமங்கள் பயன்பெறும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b