Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 05 மார்ச் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் சார்பில் சட்ட மையம் அலுவலகத்தை தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை அடுத்து கோபி பேருந்து நிலையத்தில் தவெக சார்பில் கிராம மக்களிடையே விசில் சின்னத்தை கொண்டு சேர்க்கும் வகையில் நடமாடும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;
கிராமங்கள் தோறும் கிராம மக்களிடையே விசில் சின்னத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் பிரச்சார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.
விசில் சின்னம் கிடைத்தவுடன் தளபதி அவர்கள் பொதுக்குழுவில் அறிமுகம் செய்தார் தமிழகத்தில் எட்டு வயது குழந்தைகள் முதல் இன்று அனைவரும் விசில் அடிக்கும் வகையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
உலகத்தில் இளைஞர்கள் பெண்கள் பெரியவர்கள் என ஆட்சி மாற்றத்தை காண தயாராக உள்ளனர்.
வாக்கு என்பது ஜனநாயகம் காக்கும் வாக்கு வாக்காகவும் எளிதாக அளவிட முடியாத வாக்காக உள்ளது.
அதை வீணடிக்காமல் திமுகவை வீழ்த்துகின்ற சக்தி எந்த அரசியல் கட்சியினிடம் உள்ளதோ அவர்களுக்கு வாக்களிக்கும் போது தான் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்ற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயா மட்டுமே முடியும் தவிர ஒரே முகமாக திமுகவை அகற்ற முடியும்.
இன்றைய நிலையில் திமுக ரூ.5000 அறிவித்துள்ளனர், இதனால் ஒருவருக்கு மாதம் 40 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பதற்க்காக வாக்களிக்க முடியாயு 40 ரூபாய்க்காக 5 லட்சம் கோடியை கொள்ளையடிக்க ஏமாற்றுகிற திட்டமாக உள்ளது.
எனவே இதை மனதில் வைத்து மக்கள் ஆய்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
குறிப்பாக தேர்தல் களத்தில் 3000 வழங்குவது மாதத்திற்கு வெறும் 50 ரூபாய் மட்டுமே ஆகவே இதை பெற்றுக் கொள்பவர்களால் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கின்றனர் ஆனால் மாற்றம் நடைபெறாது ஏமாற்றமே மிஞ்சும்.
2026ல் வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுவதை மக்கள் எதிர்பார்த்து துடித்து கொண்டுள்ளனர்.
ஆகவே மக்கள் மனமாற்றம் என்பது எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர் விஜய் மட்டுமே என்பதை நாடே அறிய உள்ளது.
காங்கிரஸ் தவெக உடன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தது குறித்த கேள்விக்கு?
காங்கிரஸ் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது இதில் தற்போது மன ஆச்சரியங்கள் எழுந்துள்ளது தவெகவால் பயன் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் அது NDA கூட்டணி ஆனாலும் சரி திமுக காங்கிரஸ் கூட்டணியானலும் சரி தவெகவை காட்டி கூடுதல் இடங்கள் பெறும் நிலை உள்ளது தவெகவிடம் சென்று விடுவோம் என கூறி கூடுதல் இடங்களை பெற்றுள்ளனர்.
தனித்து போட்டியா அல்லது வலிமையான கூட்டணியா என்பதை பொருத்திருந்து பாருங்கள். என்றார்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்க திராணி இல்லை தற்போது தவெக அதிமுகவின் பக்கம் திரும்பி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்த கேள்விக்கு?
ஜெயக்குமார் வேண்டுமானாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு வரலாம் தவிர அவருக்கு அதிமுகவில் இந்த முறை சீட்டு கிடைக்க போவதில்லை அவரது மகனுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் ஆதங்கத்தில் பேசிக்கொண்டுள்ளார் ஜெயக்குமார் நல்ல நண்பர் அவரது கருத்துக்கள் எல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.
என்றைக்குமே தனித்து நின்று முதலமைச்சராகும் நிலையில் தான் உள்ளாரே தவிர மற்றவர்கள் வாக்கு கேட்கும் அளவிற்கு அவர் இல்லை 18 வயது முதல் 40 வயது உள்ளவர்களின் மன நிலையை புரிந்து மற்றவர்கள் பேசினால் சரியாக இருக்கும்
தவெகவுடன் கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்போம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam