குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக - டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, 05 மார்ச் (ஹி.ச.) மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்
குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக - டிடிவி தினகரன் கண்டனம்


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)

மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் - குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b