Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 05 மார்ச் (ஹி.ச)
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (05.03.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டையில் உள்ள T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாக்கர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர், வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணாக்கர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். ஆய்வின் போது, தேர்வு அறைகளில் போதிய வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
தேர்வுகள் முறைகேடுகளின்றி நடப்பதை உறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாணாக்கர்களுக்குத் தேவையான மருத்துவ முதலுதவி மற்றும் இதர சுகாதார ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b