இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் படுகாயம்
ஈரோடு, 05 மார்ச் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான டீச்சர்ஸ் காலனி அருகே இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழக்கடையில் பணியாற்றி வரும் இளைஞர்கள் இருவரும் காலை வழக்கம் போல் செல்வதற்க
விபத்து


ஈரோடு, 05 மார்ச் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான டீச்சர்ஸ் காலனி அருகே

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பழக்கடையில் பணியாற்றி வரும் இளைஞர்கள் இருவரும் காலை வழக்கம்

போல் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர்.

அப்போது டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள சாலையை கடக்கும் பொழுது எதிர் திசையில் இருந்து வந்த தனியார் கல்லூரி மாணவன் மற்றும் பழக்கடையில் பணியாற்றி இளைஞர்கள்

இருவரும் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் ஒன்றுடன் ஒன்று மோதி

விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய மூன்று நபர்களும் பலத்த காயமடைந்துள்ளனர் பின்பு அங்கிருந்த பொதுமக்கள் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவல்

அறிந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸில் மூன்று இளைஞர்களையும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் தற்போது இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு

நேர் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் ஆனது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam