நிதிஷ் குமார் கரைபடாத கரத்துக்குச் சொந்தக்காரர் - மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்
பாட்னா, 05 மார்ச் (ஹி.ச.) பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாட்னாவில் இன்று அவர்
Union Minister Amit Shah praises


பாட்னா, 05 மார்ச் (ஹி.ச.)

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாட்னாவில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமித் ஷா கூறியதாவது,

பிஹார் முதல்வர், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேசிய அரசியலுக்குள் நுழைகிறார்.

நிதிஷ் குமார் 2005 முதல் தற்போது வரை பிஹார் முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் உண்மையிலேயே புகழ்பெற்றது. இந்த பதவிக்காலம் பிஹார் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

பிஹாரின் முழுமையான வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியவர் நிதிஷ் குமார். சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, முதல்வராக, மத்திய அமைச்சராக என பல பதவிகளை அவர் வகித்துள்ளார். ஆனால், அவர் கரைபடாத கரத்துக்குச் சொந்தக்காரர். அவரது முழு வாழ்க்கையுமே ஊழலுக்கு எதிராக இருந்து வந்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால மத்திய ஆட்சியில், பிஹாரின் முன்னேற்றத்துக்கு நிதிஷ் குமார் அனைத்து வகையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பிரதமர் மோடியின் அனைத்து முயற்சிகளும் பிஹார் மக்களைச் சென்றடைந்தது அவரது தலைமையின் கீழ்தான்.

அவர் மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லிக்கு திரும்புகிறார்.

நானும் எங்கள் என்டிஏ சகாக்கள் அனைவரும் அவரை மனதார வரவேற்கிறோம். முதல்வராக அவரது பதவிக்காலம் பிஹார் மக்களால் எப்போதும் நினைவுகூரப்பட்டு மதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b