Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது செவ்வாய்க்கிழமை மங்கள இசை விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நான்காம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவசங்கரமணியன் சாஸ்திரிகள் யாகசாலை வேள்வியினை நடத்தினார். தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி அதிர்வேட்டுக்கள் மேளதாளம் முழங்க காலை 10 மணி அளவில் புனித நீர் ஊற்றப்பட்டது அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து யோக வரசித்தி விநாயகருக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை கொடிமங்கலம் கிராம பொதுமக்கள் விநாயகர் வழிபாட்டு குழு மற்றும் எம் கே பாய்ஸ் செய்திருந்தனர்.
இதில் கொடிமங்கலம் தாராப்பட்டி மேலக்கால் சோழவந்தான் தேனூர் மேலமாத்தூர் கீழமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J