Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 05 மார்ச் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த புத்தேரி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் என்பவரின் மனைவி நவநீதம் இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும்
கூலித் தொழிலாளியான சுகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதில் நேற்று நவநீதம் ஏரி பகுதியில் மாடு மேய்க்க தனது பத்து வயது பெண்
குழந்தையுடன் சென்றபோது அங்கு இருந்த சுகுமார் என்பவருக்கும் நவநீதத்திற்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாக்குவாதம் முற்றி நவநீதம் கழுத்தை
நெறிக்க முயற்சி செய்துள்ளார் சுகுமார் பின்னர் தனது பத்து வயது பெண் குழந்தை
சுகுமாரை தன் தாயை விடும்படி கதறி உள்ளார் பின்னர் நவநீதத்தை விட்டு விட்டு அந்த குழந்தையின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்து உள்ளார் பின்னர் நவநீதம் சுகுமாரை தள்ளிவிட்டு விட்டு குழந்தையை கூட்டி வீட்டிற்கு சென்று விட்டார்
பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மீண்டும் மாடு மேய்ப்பதற்காக
அந்த பகுதிக்கு சென்றபோது சுகுமார் காலையிலிருந்து மது அருந்தி வந்துள்ளார்
இதை நவநீதம் தண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுகுமார் நவநீதத்தை அடித்து அருகில் இருந்த குப்பை கிடங்கு பகுதிக்கு இழுத்துச் சென்று கழுத்தை
நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற சுகுமாரை ஆர்கே
பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam