மேக்புக் நியோ - இந்தியாவில் அறிமுகமாகும் குறைந்த விலை ஆப்பிள் லேப்டாப்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) ஆப்பிள் நிறுவனம், $599 (இந்திய மதிப்பில் சுமார் 69,900 ரூபாய்) விலையில் மேக்புக் நியோ என்ற புதிய லேப்டாப்பை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆப்பிள் பொருட்கள் அதிக விலை கொண்டவை என்ற எண்ணத்தை மாற்றும் விதமாக, முதன்முறைய
மேக்புக் நியோ - இந்தியாவில் அறிமுகமாகும் குறைந்த விலை ஆப்பிள் லேப்டாப்


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

ஆப்பிள் நிறுவனம், $599 (இந்திய மதிப்பில் சுமார் 69,900 ரூபாய்) விலையில் மேக்புக் நியோ என்ற புதிய லேப்டாப்பை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆப்பிள் பொருட்கள் அதிக விலை கொண்டவை என்ற எண்ணத்தை மாற்றும் விதமாக, முதன்முறையாகக் குறைந்த விலையில் ஒரு லேப்டாப்பை ஆப்பிள் உருவாக்கியுள்ளது.

மேக்புக் நியோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில், கடந்த வருடம் ஐபோன் 16 ப்ரோவில் இருந்த ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப் உபயோகிக்கப்பட்டுள்ளது.

சிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, மேக்புக் நியோவில் 8 ஜிபி மெமரி மட்டுமே உள்ளது.

குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்முறை லேப்டாப் வாங்குபவர்களை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை இந்தியாவில் சுமார் 55 ஆயிரம் ரூபாய்.

வரும் 11ஆம் தேதி முதல் ஆப்பிள் விற்பனை நிலையங்களில் மேக்புக் நியோ கிடைக்கும். இதற்கான முன்பதிவு இப்போது நடைபெற்று வருகிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் விண்டோஸ் லேப்டாப்கள் மற்றும் கூகிளின் க்ரோம் புக்ஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக ஆப்பிள் நிறுவனம் இந்த மேக்புக் நியோவை அறிமுகம் செய்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM