சென்னையில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுகட்டாக பணம், வெள்ளி, தங்க கட்டி பறிமுதல்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) பெங்களூரில் இருந்து லால்பாக் ரயிலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 10 கிலோ வெள்ளி கட்டி., 288 கிராம் தங்க கட்டி ஆகியவை ஆர்.பி.எப். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதே போல்., பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆந்திர மா
தங்கம்


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

பெங்களூரில் இருந்து லால்பாக் ரயிலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 10 கிலோ வெள்ளி கட்டி., 288 கிராம் தங்க கட்டி ஆகியவை ஆர்.பி.எப். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதே போல்., பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வந்த நபரிடம் இருந்து

ரூ. 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணம் இல்லாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது.,

ஆர்.பி.எப். சிறப்பு படையால் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்., அதற்கு முன்னதாகவே ரயில்களில் ஏதேனும் தங்க நகை, வெள்ளி பணம் ஆகியவை கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி, தங்கம், பணம் ஆகியவை, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்., பறிமுதல் செய்யபட்ட தங்கம், வெள்ளி, பணம் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam