நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபர் - போலீசார் வலை வீச்சு
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜி/33 . இவரது கணவர் மணிகண்டன் திருவெற்றியூரில் தனியார் ட்ரான்ஸ்போர்ட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு
Women


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜி/33 . இவரது கணவர் மணிகண்டன் திருவெற்றியூரில் தனியார் ட்ரான்ஸ்போர்ட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல விஜி தனது இரண்டு குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரது கணவர் வேலைக்கு சென்றிருந்தார். நேற்று காலை 3 மணி அளவில் இவரது வீட்டிற்குள் வந்த மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்து விஜியிடம் பிளேடை காண்பித்து உனது குழந்தைகளை அறுத்து விடுவேன் என கூறி விஜயிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

விஜி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜி வெளியே வந்து கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று இதே பகுதியைச் சேர்ந்த சித்ரா/46 என்ற நபரும் நேற்று அவரது வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் வந்ததாகவும் அவர் கூச்சலிடவே அந்த நபர் வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு புகார்கள் குறித்தும் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ