தஞ்சை பெரிய கோவிலில் ஏப்ரல் 13 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர், 06 மார்ச் (ஹி.ச) உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திர
தஞ்சை பெரிய கோவிலில் ஏப்ரல் 13 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம்


தஞ்சாவூர், 06 மார்ச் (ஹி.ச)

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று (மார்ச் 6) நடைபெற்றது.இதனை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பந்தக்கால் முகூர்த்த நிகழ்வை முன்னிட்டு பந்தக்காலிற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் அடுத்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b