Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 06 மார்ச் (ஹி.ச)
திருச்சி கம்பரசம் பேட்டை வெள்ளாந் தெருவை சேர்ந்தவர் கணேஷ் பிரபு.
இவரது மனைவி புவனேஸ்வரி.
இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் ஜெய்கணேஷ்.
இவர் திருவரம்பூர் BHEL ல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் மீனாட்சி மிஸ்ரா.
புவனேஸ்வரி தங்களது தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு
உணவளிப்பதை
வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் மீனாட்சி மிஸ்ரா தனது வீட்டின் எதிரே, பிறந்து சில நாட்களே ஆன நாய்க்குட்டிகள், தாயைத்தேடி குரைத்ததைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மீனாட்சி மிஸ்ரா வெறி கொண்டு
நாய்க் குட்டிகளை சுவற்றில் அடித்ததில் நாய்க்குட்டிகள் இறந்து விட்டன.
இது குறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் மீனாட்சி மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam