Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)
எழும்பூர், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் இன்று மின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எழும்பூர், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் இன்று மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மின் உபயோகிப்பாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்.
எழும்பூர் பகுதி:
செயற்பொறியாளர் இ&ப/ எழும்பூர் கோட்ட அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கி.வோ எழும்பூர் துணை மின் நிலையம், வேப்பேரி, சென்னை-600 007.
ஆவடி பகுதி:
செயற்பொறியாளர் இ&ப ஆவடி கோட்ட அலுவலகம், 230 கி.வோ ஆவடி துணை மின் நிலையம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி சென்னை-600 062.
பெரம்பூர் பகுதி:
செயற்பொறியாளர்/ இ&ப/ பெரம்பூர் அலுவலகம், 110 கி.வோ செம்பியம் துணை மின் நிலையம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை-600 011.
இந்த கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று சென்னை மையம், மேற்கு மற்றும் வடக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM