Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச)
சென்னை, அமைந்தகரை, ராஜேஸ்வரி தெருவில் வசித்து வரும் ராம்நாத்(45) என்பவர் அடையாறு, சாஸ்திரிநகர் 8வது குறுக்கு தெருவில் ஆர்கானிக் கடை நடத்தி வருவதாகவும், கடந்த திங்கட்கிழமை இரவு அன்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டி மற்றும் மரப்பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.22,000/- மற்றும் சுமார் 6 சவரன் எடை கொண்ட வைரக்கல் பதித்த தங்க மோதிரம், கம்மல் உட்பட தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயிருந்ததாகவும், தங்க வைரநகைகள் மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு ராம்நாத் என்பவர் சாஸ்திரிநகர் காவல் குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சாஸ்திரிநகர் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செல்வராஜ்(33) சங்கர்(66) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடையில் திருடிய 31 கிராம் எடை கொண்ட வைரக்கல் பதித்த தங்க நகைகள் மற்றும் 34 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை மீட்கப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து, கடையில் திருடிய பணத்தை செலவு செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ