கஞ்சா விற்பனை செய்ததாக கூறி கைது செய்ய வந்த போலீசாரை கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் பர்மாவசன் இவர் மீது அடிதடி கஞ்சா விற்பனை உட்பட பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவர் மீது புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பி கேட்டகிரிச் குற்றவாளி
கைது


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் பர்மாவசன் இவர் மீது அடிதடி கஞ்சா விற்பனை உட்பட பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவர் மீது புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பி கேட்டகிரிச் குற்றவாளி என சரித்திர பதிவேடும் உள்ளது.

இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வதாக துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில் இன்று காலை திருவொற்றியூரில் இவரை துணை ஆணையர் தனிப்படையினர் தேடிச் சென்றுள்ளனர்.

அங்கு வினோத் இல்லாததால் அவரது பாட்டி வீடு அமைந்துள்ள புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள்தெரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதிக்கு வந்துள்ளனர்.

தன்னை கைது செய்ய தான் போலீசார் வருகிறார்கள் என்பதை உணர்ந்த பர்மா வசந்த் புதிதாக கட்டிய நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் மீது ஏறிக்கொண்டு *என்ன கைது பண்ணீங்க உங்க கண்எதிரே கீழே குதிச்சு செத்துருவேன் என மிரட்டல் விடுத்தார்.

சுமார் அரை மணி நேரமாக இவர் தற்கொலை மிரட்டல் விழுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் உடைய ஆய்வாளர் சுதாகர் வந்த நிலையில் பர்மாவசந்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இனி எந்த தவறும் செய்யாமல் இருந்தால் போலீசார் கைது செய்ய மாட்டார்கள் என லாவகமாக பேசி வசந்தக் கீழே அழைத்து வந்தார்.

கீழே வந்த வசந்தத்திற்கு அறிவுரை கூறி குடும்பத்தினரோடு அனுப்பி வைத்தார்.

கைது செய்ய வந்த போலீசாருக்கு மரண பீதியை காட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளியாய் அந்த பகுதியை பரபரப்பு களமாக காணப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam