Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 மார்ச் (ஹி.ச)
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த கஸ்தூரியின் கை, கால்களை கட்டி போட்டு கொலை செய்து விட்டு நகைகளை திருடிய சென்றுள்ளனர்.
வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்த பணிப்பின் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மருத்துவ ராம்குமார் குட்டி என்பவரின் தாயார் கஸ்தூரி. ஆயூர்வேத மருத்துவர் ராம்குமார் குட்டி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் தயார் கஸ்தூரி மட்டும் வீட்டில் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார்.
வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பின்னால் தூக்கி வீசப்பட்டிருந்த கைபேசி மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் துணை ஆணையர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
கேரளாவை சேர்ந்த வயதான பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
7 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தனிப்படை வரைந்து உள்ளது.
கட்டிப்போட்டு விட்டு நகைகளை திருடி சென்றுள்ளதால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam