நாங்குநேரி விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற உத்தரவு
மதுரை, 06 மார்ச் (ஹி.ச) ஒடிசா புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டா கொலை செய்யப்பட்ட வழக்கில், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நாங்குநேரி அருகே பெரு
Madurai High Court


மதுரை, 06 மார்ச் (ஹி.ச)

ஒடிசா புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டா கொலை செய்யப்பட்ட வழக்கில், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2ஆம் தேதி இரவு அரிவாள்களுடன் இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியதில் மாற்றுத்திறனாளி ஜான் மார்க் (45), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரிநாத் கட்டா (45) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சூழலில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் திரிநாத் கட்டாவுக்கு எந்த விதமான

இழப்பீட்டுத் தொகையும் மாநில அரசு வழங்கவில்லை. இந்நிலையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு, வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார் முறையீடு செய்தார்.

மேலும் இதுகுறித்து உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN