அ.தி.மு.க, பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை - நயினார் நாகேந்திரன்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காலம் இன்னும் அதிகமாக உள்ளது. தொகுதி பங்கீடு சம்பந்தமாக நாங்கள் இன்னும் முட
Nainar Nagenthran Byte


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது பேசிய அவர்,

தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

காலம் இன்னும் அதிகமாக உள்ளது.

தொகுதி பங்கீடு சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பிரதமர் வருகை நீங்கள் அனைவரும் மதுராந்தகம்கூட்டத்தை பார்த்தீர்கள் அடுத்து மதுரை கூட்டத்தை பார்த்தீர்கள் மிக பிரமாண்டமான எழுச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் இன்று நடைபெறும் காட்டு தர்பார் ஆட்சி கஞ்சா ஆட்சி பெண்கள் நடமாட முடியாத ஆட்சி. சிறு குழந்தைகள் நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கஞ்சா அடித்து விட்டு சாலையில் வருபவர்களை சாதாரணமாக வெட்டுகிறார்கள். தினமும் ஒவ்வொரு ஊரிலும் வெட்டுகிறார்கள். திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் நடைபெற்றுள்ளது அதன் அடுத்தபடியாக கும்பகோணத்தில் நடைபெற்றுள்ளது.

சொத்து வரி 300 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு தருவோம் என சொன்னார்கள் 28 மாதங்கள் தரவில்லை நாடாளுமன்ற தேர்தலில் போதுதான் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணம் வழங்கப்படவில்லை.

ஓட்டுக்காக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது மக்கள் இதனை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி மாற்றம் உறுதி. ஆளுநர் மாற்றம் சம்பந்தமாக பேசிய நயினார் நாகேந்திரன் ஆளுநர் வெகு நாட்களாக ஆகிவிட்டது அதனால் மாற்றப்பட்டுள்ளார். என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ