ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு
தமிழ்நாடு, 06 மார்ச் (ஹி.ச.) பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தினால், முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவ
தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு, 06 மார்ச் (ஹி.ச.)

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தினால்,

முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்களும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப படிப்படியாக நிரந்தரப் பணி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரப் பணியாளர்களைப் போலவே ஒப்பந்த எம்ஆர்பி மூலம் தேர்வு செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனை, மாவட்டம் மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, மற்றும் நகரப்புற மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுமார் 6000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது பிரதான கோரிக்கை நிரந்தரப் பணியாளர்களைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க மீண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது அதை ஏற்ற தமிழக அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறை (6 மாதம் மொத்தம் 186 நாட்கள் விடுப்பு வழங்க மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

Hindusthan Samachar / GOKILA arumugam